அடுத்தடுத்து முடங்கும் ட்விட்டர் கணக்குகள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் இயக்குனரும், நடிகருமான சீமான் சி.பா ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைப்பாளராக வழிநடத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசியம் குறித்து பேசி வரும் நிலையில் தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்று தனது அரசியலை முன்னெடுத்து வருகிறார். இவரின் ஆக்ரோஷமான அரசியல் பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு சற்று முன்னர் இந்தியாவில் முடக்கப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவன் கார்த்திக் மற்றும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஐடி விங் ட்விட்டர் கணக்கும் தற்பொழுது இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK executives Twitter accounts are withheld in India


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal