கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது - ரசிகர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு.!
no use tvk name in goat movie release banner leader vijay order
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் விஜய் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பட வெளியீட்டை முன்னிட்டு நோட்டீஸ், பேனர்கள் ஏதேனும் வைத்தால், அதில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று பதிவு செய்யாமல் 'விஜய் மக்கள் இயக்கம்' என்று பதிவு செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுப்பட்டுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்பது அரசியல் கட்சி என்பதால் அரசியலுக்கு மட்டுமே கட்சி பெயரை பயன்படுத்த வேண்டும். திரைப்படங்களுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
English Summary
no use tvk name in goat movie release banner leader vijay order