மஹாராஷ்டிரா மாநில அரசியல் புயல் | தலைவராகும் அஜித் பவார்!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா சிவ சேனா கட்சியின் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே வாரிசு அரசியலை முன்னெடுக்க, அக்கட்சி இரண்டாக உடைந்து, ஆட்சியின் முதலமைச்சர் பதவியையும் இழந்தார் உத்தவ் தாக்கரே.

இதுகுறித்த உச்சநீதிமன்ற வழக்கில், தற்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராகும் முயற்சியில் இறங்கியதாக பேசப்பட்டது. ஆனால், அஜித் பவார் இதற்க்கு மறுப்பு தெரிவித்தார்.

இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் - அஜித் பவார் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் அறிவித்தார். 

இதனையடுத்து அக்கட்சியின் புதிய தலைவராக அஜித் பவார் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்ப பெற மாட்டார் என்று, அஜித் பவார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCP Sharad Pawar Ajith Pawar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->