தவெக அமைச்சர்களுக்கு தமிழை சரியாகக் கூட உச்சரிக்க தெரியவில்லை; நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!
Nayinar Nagendran criticized the ministers for not even being able to pronounce Tamil correctly
விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது;
''பூலித்தேவன் நினைவு தபால்தலை வெளியிட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அந்தக் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அவரது தபால்தலை நிச்சயமாக வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
பூலித்தேவன் புகழ் இன்னும் வெளிக்கொணரப்படவில்லை என்ற வருத்தமும், ஏக்கமும் மக்களிடம் உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இதை தெரிவித்து, பூலித்தேவன் புகழை பரப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் முதல்வருக்கு இல்லை என்றும், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வேறு பதில்களை அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். தமிழை சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும், இதை சட்டப்பேரவை உறுப்பினர் தி.மு.ராஜேந்திரன் கூட்டிக்காட்டிய போது எங்களுக்கு கிறிஸ்தவம்தான் முக்கியம் என்கிறார். அமைச்சர் ஜெகதீஸ்வரி இல்லங்கள் என்பதை இலக்கங்கள் என்று வாசிக்கிறார். தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தஞ்சாவூரில் ஒன்றேமுக்கால் லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படாமல் உள்ளது. அந்த விவசாயிகளுக்கு நிதியை முதல்வர் கொடுப்பாரா? சமூக வலைதளங்களில் ரூட் மாபியாக்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Nayinar Nagendran criticized the ministers for not even being able to pronounce Tamil correctly