தென் தமிழகத்தை குறி வைத்த மோடியின் பயண திட்டம் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பயணம் திட்டம் குறித்தான முழு விவரமும் வெளியாகி உள்ளதால் தமிழக முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியை தொடங்கியுள்ளனர்.

அதன்படி, 

27.02.2024:

- பிற்பகல் 1:20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2:06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்.

- பிற்பகல் 2:10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நரேந்திர மோடி பல்லடம் செல்கிறார்.

- பிற்பகல் 2:45 முதல், 3:45 வரை என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

- பிற்பகல் 3:50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, பல்லடம் விரைந்து, அங்கிருந்து 5:05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.

- மாலை 5:15 மணி முதல் 6:15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

- மாலை 6:15 முதல் 6:45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு நரேந்திர மோடி ஓய்வு எடுக்கிறார்.

அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார்.

28.02.2024:

- காலை 8:15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார் நரேந்திர மோடி.

- காலை 8:40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9:00 மணிக்கு நரேந்திர மோடி சென்றடைகிறார்.

- முற்பகல் 9:45 மணி முதல் 10:30 மணி வரை அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

- முற்பகல் 10:35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு 11:10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார் நரேந்திர மோடி.

- முற்பகல் 11:15 மணி முதல் 12:15 மணி வரை நடைபெறும் பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்.

- பிற்பகல் 12:30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi tamilnadu visit schedule released


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->