நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Nallakannu again hospital admit
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (100) உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மூத்த மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
சிகிச்சை பலனுடன் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஆனால் இன்று அதிகாலை உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டதால், அவரை மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் தெரிவித்ததாவது, நல்லகண்ணு தற்போது வாய் வழியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், டியூப் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. நேற்றிரவு உணவு உட்கொள்ளும் போது ஏற்பட்ட சிரமம் காரணமாகவே அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டியிருந்தது. தற்போது அவர் நிலைமை ஸ்திரமாக இருப்பதாகவும், தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர்.
English Summary
Nallakannu again hospital admit