முதல்வர் விஜய்க்கு சால்வை போட்டதை அதை கொச்சைப்படுத்த வேண்டாம்; நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran says the act of draping a shawl over Chief Minister Vijay should not be trivialized
''ஒரு கட்சி தலைவர் என்கிற முறையில் முதல்வர் விஜய்க்கு நான் சால்வை போட்டு மரியாதை செலுத்தினேன். அதை யாரும் கொச்சைப்படுத்த்தாதீர்கள்'' என்று, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நயினார் இது குறித்து கூறுகையில் தெரிவித்துள்ளதாவது;
மின்வெட்டு பிரச்சினை நிறைய இருக்கிறது. அந்த வேலையை பார்க்காமல், நான் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கேள்வி கேட்பதால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், நிறைய முன்னுதாரணங்கள் இருக்கிறது என்றும், அதை நான் சொல்ல விரும்பவில்லை. அப்படி சொன்னால், தொடர்ந்து நான் தவெகவை விமர்சிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருக்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கையும் என்று தெரிவித்தபோது, ஒரு கட்சி தலைவர் என்கிற முறையில் முதல்வர் விஜய்க்கு நான் சால்வை போட்டு மரியாதை செலுத்தினேன். அதை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். ஒரு நாட்டின் பிரதமர் வரும்போது, அவரை முதல்வர் வரவேற்பது மரபு என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran says the act of draping a shawl over Chief Minister Vijay should not be trivialized