சர்ச்சைக்குரிய நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கிய பொது செயலாளர்.! தமிழக பாஜக தலைமை அதிரடி.! - Seithipunal
Seithipunal


பிற்படுத்தப்பட்டோர்‌ அணியின்‌ மாநில செயற்குழு உறுப்பினர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பலூர்‌ மாவட்டம்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ அணியின்‌ மாநில செயற்குழு உறுப்பினரான திரு. லுவாங்கோ அடைக்கலராஜ்‌ அவர்கள்‌ கட்சிக்‌ கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம்‌ விளைவிக்கும்‌ செயல்களில்‌ ஈடுபட்டதால்‌, கட்சியின்‌ பொறுப்பில்‌ இருந்தும்‌, அடிப்படை உறுப்பினரிலிருந்தும்‌ உடனடியாக நீக்கப்படுகிறார்‌.

ஆகவே கட்சியின்‌ நிர்வாகிகள்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌ அவரிடம்‌ எவ்வித தொடர்பும்‌ வைத்துக்‌ கொள்ள வேண்டாம்‌ என அறிவுறுத்தப்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.

தமிழக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் 2 கிலோ அபினோடு கைது செய்யப்பட்ட பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் லுவாங்கோ அடைக்கலராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nagaraj statement about luvango adaikalaraj


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->