ராஜபக்ச முன் ஈழத் தமிழர்களை கொச்சைபடுத்தி பேசிய முத்தையா முரளிதரன்!! கடும் கோபத்தில் ஈழத் தமிழர்கள்!! - Seithipunal
Seithipunal


பொதுஜன பெரமுனவின் அதிபர்  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் கலந்துகொண்டு பேசியதாவது, இலங்கையில் நடந்த இறுதிக்கட்டபோரின் போது சமாதான பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அவர்கள் வாய்ப்பை தவறவிட்டு விட்டதாகவும் முரளிதரன் குற்றஞ்சாட்டி உள்ளார். 

2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடந்த யுத்ததின் முடிவில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக சிறந்த நாள் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார். போர் நடந்த காலத்தில் இலங்கை மக்கள் அச்சத்தின் பிடியில் இருந்ததாகவும் விடுதலை புலிகள் அழிவிற்கு பிறகே அச்சமின்றி நடமாட முடிந்த‌தாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.  

முரளிதரன் இலங்கை தமிழராக இருந்தும்,  ஈழத் தமிழ் மக்களின்போராட்டத்திற்கு எதிராகவும், ஈழத் தாய்மார்களின் கண்ணீரை கொச்சைப்படுத்தியும் முரளிதரன் பேசிய கருத்துக்கள், ஈழத் தமிழர்களின் நெஞ்சில் சிங்கள இராணுவத்தின் குண்டுகளைப் போலவே தாக்கியுள்ளது.

மேலும் முரளிதரன் இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரர் என்பதை விட அவர், சிங்கள கிரிக்கெட் வீரர் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் அவர் பேசுவதுதான் சிங்களம் போல இருக்கும் என்று நினைத்தால் ஆனால் அவர் ஒரு சிங்களவராகவே சிந்திப்பதும் பேசுவதையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். முரளிதரன் வேடத்தில் நடிப்பது ஈழத்துரோகி கருணாவின் வேடத்தில் நடிப்பதற்கு சமம் என சமூகவலைத்தளங்களில் ஈழத் தமிழர்கள் முரளிதரனுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

muralitharan says about srilankan tamilans


கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
Seithipunal