பாஜகவின் ஏஜென்ட் மம்தா பானர்ஜி-காங்கிரஸ் மாநில தலைவர்.! - Seithipunal
Seithipunal


5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து மம்தா பானர்ஜி நேற்று பேசுகையில் காங்கிரஸ் மக்களின் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என்றும் காங்கிரஸை நம்பியிருக்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஆர்.சவுத்ரி கூறியதாவது, "முட்டாள் மனிதருக்கு பதில் அளிப்பது சரியான அணுகுமுறை அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் 700 எம்எல்ஏக்கள் உள்ளனர். மம்தா பானர்ஜி எத்தனை எம்எல்ஏக்கள் கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்கு பகிர்வு சதவீதத்தில் 20% காங்கிரஸ் வசம் உள்ளது மம்தாவின் இருக்கிறதா.?

பாஜகவை மகிழ்விப்பதற்காக மம்தா இப்படி சொல்கிறார். மேலும் அவர் பாஜகவின் ஏஜென்ட் போல செயல்படுகிறார். இந்த விஷயம் தொடர்புடைய கருத்துக்களை பேச வேண்டும் என்பதற்காக அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumtha Banerjee is a stupid West Bengal Congress committee president


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->