#BigBreaking | சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். இவரின் தந்தையும் திமுகவின் முக்கிய புள்ளியாக இருந்தவர் ஆவார். 

எம் ஆர் கே பன்னீர்செல்வம் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சற்றுமுன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு என்ன உடல்நலக்குறைவு என்ற விவரங்கள் ஏதும் தற்போதுவரை வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mRk panneerselvam admitted in Apollo hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->