"இந்தியா ஒரு இந்து நாடு; இதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை" - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அதிரடி!
Mohan Bhagwat RSS INDIA Hindu nation
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இயற்கையான உண்மை:
"சூரியன் கிழக்கில் உதிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை. அதுபோலவே, இந்தியா ஒரு இந்து நாடு என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை. நாடாளுமன்றம் அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையைச் சேர்த்தாலும் சரி, சேர்க்காவிட்டாலும் சரி, அதைப் பற்றிக் கவலையில்லை. ஏனெனில் இந்தியா ஒரு இந்து நாடு என்பதுதான் எதார்த்தம்," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்து என்பதன் வரையறை:
யாரெல்லாம் இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதுகிறார்களோ, இந்தியக் கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்களோ மற்றும் இந்திய மூதாதையர்களின் பெருமையை நம்புகிறார்களோ, அவர்கள் இருக்கும் வரை இந்தியா இந்து நாடாகவே நீடிக்கும் என அவர் விளக்கினார். மேலும், "பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு என்பது இந்துத்துவாவின் அடையாளம் அல்ல" என்பதையும் அவர் மிகத் தெளிவாகத் முன்வைத்தார்.
மத நல்லிணக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை:
ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பிம்பத்தைத் தகர்க்கும் வகையில் பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ். மிகவும் வெளிப்படையான அமைப்பு. முஸ்லிம்களுக்கு எதிராக ஏதாவது நடப்பதாக நீங்கள் கருதினால், நீங்களே வந்து பாருங்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை எனில், தயவுசெய்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ்-ஐப் புரிந்துகொள்ள மனம் இல்லாதவர்களின் கருத்தை யாராலும் மாற்ற முடியாது," எனத் தெரிவித்தார்.
English Summary
Mohan Bhagwat RSS INDIA Hindu nation