மோடிக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகி விட்டனர் - மல்லிகார்ஜுன கார்கே!!
Modi leave from people ready Mallikarjuna Garge
நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி உள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியார்களிடம் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,
நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். மோடி போன்று பொய் பேசும் ஒரு நபரை இந்தியா பார்த்ததில்லை. இஸ்லாம் குறித்து அவதூறாக பேசவில்லை என்று அபாண்டமாக போய் கூறுகிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசு துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். நரேந்திர மோடிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று கூறினார்.
English Summary
Modi leave from people ready Mallikarjuna Garge