5வது முறையாக வெற்றி கூட்டணி; நான் தான் வேட்பாளர்.. மு.க ஸ்டாலின் அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் சூழலில் திமுக தலைவர் மு‌.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி 2024 தேர்தல் வரை 5வது முறையாக வெற்றி கூட்டணி அமைத்துள்ளோம். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் ஸ்டாலின் என்பதை மனதில் வைத்து திமுகவினர் பணியாற்ற வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசு நாட்டை பல ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது. அடுத்த அரசு சமூக நீதி, மாநில உரிமை, மக்கள் மேம்பாடு உள்ளிடவை அடங்கி கூட்டாட்சியாக அமைய வேண்டும்.  40க்கு 40 என்ற வெற்றியை பெற்றால் தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றம் நிகழும்" என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MKStalin statement we formed 5th time wining alliance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->