வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்புகிறது.!! - முதல்வர் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிட தமிழகம் வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களை பார்வையிட்டார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வுக்குப் பின் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது "சென்னையில் இயல்புநிலை திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதற்கட்டமாக 450 கோடி ரூபாயை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. புயல் நிவாரண நிதியாக 5060 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு வர தொடங்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin said Chennai returns to normal after flood


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->