உத்தரகண்ட் பாஜக முதல்வருக்கு.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உத்தரகண்ட் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

5 மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபி தவிர்த்து, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக வெற்றி ஆட்சி அமைக்க உள்ளது.

இதனையடுத்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mk Stalin wishes uthirakhand chief minister pushkar Singh thami


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->