வேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின்! முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்! - Seithipunal
Seithipunal


7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்பில் தமிழக அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு 45 நாட்கள் மேல் ஆன நிலையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை தமிழக அரசு, மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற நோக்கில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பித்தது.

இந்த நிலையில், இன்று காலை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஒப்புதல் வழங்கியுள்ளார். 

இந்நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 

"45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடு-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி. திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்." என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk stalin thank to tn governor for medical reservation


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->