'திமுகவை எதிர்ப்பதற்கு பாஜகவிற்கு வலிமை இல்லை;அதனால்தான் அதிமுகவை விலைக்கு வாங்கி இருக்கிறது'; மு.க.ஸ்டாலின் பேச்சு..!
MK Stalin states that the BJP has bought the AIADMK because it lacks the strength to oppose the DMK
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தொடங்கினார். அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் வேட்பாளர் SDPI முகமது முபாரக் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அப்போது கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது; 1948-க்கு பிறகு 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை சாலை அமைத்து 1970-இல் ஓட வைத்தவர் கலைஞர் தான் என தெரிவித்துள்ளதோடு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும், அடுத்து ஆட்சி அமைத்தால் செயல்படுத்தப்போகும் திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.
அத்துடன், ஒரு மாபெரும் அறிவிப்பு அறிவித்திருக்கிறேன். டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த ஐந்தாண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் உட்கட்டமைப்பு மாறப்போகிறது என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன், என்டிஏ தலைமையாக இருக்கும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை. அதனால்தான் அதிமுகவை விலைக்கு வாங்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
MK Stalin states that the BJP has bought the AIADMK because it lacks the strength to oppose the DMK