234 தொகுதியிலும்., முக ஸ்டாலின் போட்ட அதிரடி தேர்தல் திட்டம்.!  - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 19ம் தேதி தனது தொடங்கியுள்ளார்.

அதேபோல், திமுகவும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல் ஆளாக ஸ்டாலின் மகன் உதயநிதி-யை களமிறக்கியது. உதயநிதி செல்லும் சில இடங்களில் வரவேற்பு கிடைத்தாலும், பல இடங்களில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதே சமயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், 234 தொகுதியிலும் முக ஸ்டாலின் நேரடியாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக முடிவு செய்துள்ளார். 

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதனை வரும் 25-ந்தேதி கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் முறைப்படி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin election plan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal