புதுச்சேரியில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மிகக் குறுகிய நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

புதுச்சேரியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் படி, கடந்த மாதம் 31-ந் தேதி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை ஒன்பது மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார். 

இந்த பிரசார கூட்டத்தில் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு இன்று காலை 9.40 மணிக்கு கார் மூலமாக மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin election campaighn in puthuchery


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->