ஒரு புகைப்படத்தைக் காட்டுங்கள் நான் அரசியலை விட்டு விலகிடுறேன் - அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாநகர் மண்டித்தெருவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். எந்த காலத்திலும் தமிழகத்தில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது. தோல் சார்ந்த தொழில்களுக்குத் தேவையான மேம்பாட்டுத் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். வேலூருக்கு மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.

நான் காட்டுவது எய்ம்ஸ் செங்கல், எடப்பாடி காட்டுவது அவருடைய பற்களை. எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய கையோடு பல்லைக் காட்டியவர் எடப்பாடி. நாளையுடன் முடிவடையும் வேட்புமனுத்தாக்கல்; பம்பரத்திற்கு போராடும் மதிமுக! தேர்தல் அதிகாரி வைத்த செக்!
நான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியின் போட்டோவை காட்டியதற்குப் பதிலாக நானும் முதல்வரும் டெல்லியில் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்த புகைப்படத்தை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

நான் ஒரு விளையாட்டுத்துறை அமைச்சர், அவர் ஒரு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர். நாங்கள் கேலோ இந்தியா விளையாட்டையும், செஸ் ஒலிம்பியாட் போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியதால் பிரதமரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் எங்களைப் பாராட்டிச் சென்றார்கள். நீங்கள் காட்டிய போட்டோ அதுதான். ஆனால் நாங்கள் காட்டிய போட்டோ நீங்கள் பல்லை காட்டியது. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

என்னை ஸ்கிரிப்டை மாற்றிப் பேசச் சொல்கிறார் எடப்பாடி, என்னால் ஸ்கிரிப்ட்டை மாற்ற முடியாது. நான் சமூக நீதி, சுயமரியாதை, எய்ம்ஸ் பற்றித்தான் பேசுவேன். எடப்பாடி அவர்களே... நீங்கள் ஒரு பச்சோந்தி. மோடியைப் பார்த்தால் பேச மாட்டீர்கள் காலில் விழுந்து விடுவீர்கள். ஓபிஎஸ் இடம் ஒரு மாதிரி, சசிகலாவிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள். சில நேரம் பேசவே மாட்டீர்கள், காலில் விழுவீர்கள். இது போன்று யாருடைய காலிலாவது நான் விழும் புகைப்படத்தைக் காட்டுங்கள் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்" என்று கட்டமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister uthayanithi speech in vellore election campaighn


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->