நடிகர் விஜய்க்கு அறிவில்லை! கூட்டத்த பார்த்துவிட்டு பகல் கனவு - விளாசிய தா.மோ அன்பரசன்! - Seithipunal
Seithipunal


நடிகர் எல்லாம் அரசியலுக்கு வராங்க ஆனா அவங்களுக்கு அறிவு இருக்குமான்னா இருக்காது என்று அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கலில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தாமோ அன்பரசன் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் த.மோ அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் அதில் எனக்கு மகிழ்ச்சியே. திமுக இல்லாத ஒரு சந்து கூட தமிழ்நாட்டில் கிடையாது. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகள் திமுக எதிர்கட்சியாக இருந்தது எவ்வளவு பெரிய கட்சிக்கு இந்த நிலைமை இருக்கின்ற போது, தனக்கு கூட்டம் கூடுகிறது என்று நினைத்துக் கொண்டு சில நடிகர்கள் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்.

கூட்டத்தை பார்த்துட்டு நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வராங்க ஆனா அவங்களுக்கு அறிவு இருக்குமானா இருக்காது. கட்சி நடத்துறதுனா என்ன சாதாரணமா? சினிமாவில் இருந்து வந்து முதல்வராவதெல்லாம் எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு போய்விட்டது.

இது தெரியாமல் எதிர்காலத்தில் முதல்வர் ஆகும் கனவோடு இருப்பவர்களின் கனவுகளை எல்லாம் பொய்யாக்க வேண்டும் என்றால் நாம் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Thamo Anbarasan said that all actors should enter politics but they will not have any knowledge


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->