நீதிபதி சொன்ன ஒற்றை வரி! சிறை பறவை செ.பா.,வின் ஜாமின் மனு தள்ளுபடி! சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் "சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்ற ஒரே வரியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுக்க காரணம் என்ன என்பது குறித்து நீதிபதி அல்லி எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை நீதிமன்றம் மறுப்பு தெரிவிப்பது திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji bail plea dismissed by Chennai court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->