பழநி கோயில் நிலம் விவகாரத்தில் எதிர்கட்கிகள் தவெக அரசின் மீது ஊழல் கறையை பதித்திட முயற்சி; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் தவெக அரசின் மீது ஏதாவது ஊழல் கறையை பதித்திட வேண்டும் என செயல்படுகின்றதாகவும், ஆனால், முதலமைச்சர் சொன்னது போல், எங்களின் அரசு தூய்மையான அரசாக இருக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பழநி கோயில் நிலம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள புகார்கள் குறித்து அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரமேஷ் கூறியதாவது; 

ஜூலை ஆறாம் தேதி இடமாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளர் இடத்திற்கு ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் கூடுதல் பொறுப்பாக சார்பதிவாளராக செயல்பட்டார். அவர், இந்த நிலம் தொடர்பான வழக்கு விவரம் தெரியாமல், நிலத்தைப் பதிவு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தெரியவந்ததும், அந்த நிலம் பதிவு செய்யாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகவும், நாளை இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த நிலத்தை மீட்போம் என்பதை உறுதி அளித்துள்ளார். அத்துடன், துறைசார் அமைச்சரும், சார்பதிவாளரை இடைநீக்கம் செய்துவிட்டு, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 'அரசு இந்த விவகாரத்தில் என்ன செய்கிறது என்பதே தெரியாமல், அமைச்சரின் உறவினர் இதனை வாங்கிவிட்டார். அமைச்சருக்கு இதில் தொடர்பு இருக்கிறது' என எதிர்க்கட்சிகள் இந்த அரசின் மீது ஏதாவது ஊழல் கறையை பதித்திட வேண்டும் என செயல்படுகின்றதாக தெரிவித்துள்ளார். ஆனால், முதலமைச்சர் சொன்னதுபோல், எங்களின் அரசு தூய்மையான அரசாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், குறிப்பாக என் உறவினர் என சொல்லி, பொய் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வகையில், காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளதாகவும், என் உறவினர் என பரப்புபவர்கள் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் எண்டுறம், ஒரு இஞ்ச் கோயில் நிலம்கூட விடமாட்டோம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Ramesh alleges that the opposition is trying to smear the government with corruption in the Palani temple land issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->