சிட்டாக பறந்து "திருமாவளவன் மாடு".. தங்க காசு கொடுத்த அமைச்சர் பிடிஆர்.‌. - Seithipunal
Seithipunal


மதுரையில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று ஆயிரம் காளைகள் அவித்த விடப்படும் என தெரியவந்துள்ள நிலையில் அதனை அடக்க 300க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை தொடங்கிய அவினியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். முதல் சுற்று போட்டிகள் நடந்து முடிந்து இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் காளை அழித்துவிடப்பட்டது. அப்போது வர்ணனையாளர் "அடடா... மயிலை காளை... மச்சக்காளை....தொட்டுப்பார்.. திருமாவளவன் மாடு.." என பேசிக் கொண்டிருக்கும்போதே மாடு பிடி படாமல் சென்றது.

திருமாவளவன் காளைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சார்பாக அறிவிக்கப்பட்ட தங்க காசு வழங்கப்பட்டது. இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்பில் அவிழ்த்து விடப்பட்டன. இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் ஒரு காரும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் வழங்கப்பட உள்ளது என்பது குறிபத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ptr give gold coin to thirumavalavan bull


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->