ரூ.30,000 கோடி ஊழல்... ஈகோவால் பிடிஆர் சிக்கியனார்; ஆடியோ டெஸ்டுக்கு தயாரா? அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், இடைத்தேர்தல் அரசியல் சூழல், அதிமுக உட்கட்சி விவகாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்ச்சை மற்றும் பழனிவேல் தியாகராஜனுடனான (PTR) மோதல் குறித்துக் காட்டமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இடைத்தேர்தலும் எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனமும்:

இடைத்தேர்தலில் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திமுகவும் அதிமுகவும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல்குமார், இத்தேர்தலில் தவெகவுக்கு (தமிழக வெற்றிக் கழகம்) எவ்வித பின்னடைவும் இல்லை என்றார். எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக திமுகவுக்கு ஆதரவளிக்கும் நிலையை எடுத்ததாலேயே அதிமுகவில் அதிருப்தி ஏற்பட்டு நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர் என்றும், அதிமுகவைச் சீர்குலைத்து திமுகவுக்கு இபிஎஸ் முட்டுக்கொடுத்து வருகிறார் என்றும் சாடினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்ச்சை & பிடிஆர் மீது தாக்குதல்:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் பிடிஆர் குடும்பம் புறக்கணிக்கப்படவில்லை என்றும், பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், "பிடிஆர் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை 3 ஆண்டுகளாகப் பூட்டி முடக்கி வைத்திருந்தனர். நான் தலையிட்டு அதைத் திறந்து வைக்க உதவியதால் என் மீது அவருக்கு 'ஈகோ' ஏற்பட்டுள்ளது. கோவிலைக் கட்டிய பாண்டிய மன்னர்களை விடப் பிடிஆர் அதிகமாகப் பேசுகிறார்" எனக் விமர்சித்தார்.

ஆடியோ பரிசோதனைக்குச் சவால்:

திமுக ஆட்சியில் ஒரே குடும்பம் ரூ.30,000 கோடி ஊழல் செய்ததாகப் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கடந்த காலத்தில் வெளியான ஆடியோவைக் சுட்டிக்காட்டிய அமைச்சர், "நிதியமைச்சராகத் திறம்படச் செயல்பட்டிருந்தால் திமுக ஆட்சியில் பிடிஆர் ஏன் ஒதுக்கப்பட்டார்? அந்தப் புகழ்பெற்ற ஆடியோவின் உண்மைத்தன்மையை அறிய ஆடியோ டெஸ்டுக்கு (Audio Test) அவர் தயாரா?" என நிர்மல்குமார் சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Nirmalkumar Slams EPS and PTR Challenges PTR to Audio Authenticity Test


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->