''பாஜக எப்போது உள்ளே வந்தது தலையிட்டதோ அன்றில் இருந்து அமைதி போய்விட்டது; அரசு மேடையில் நயினாரை தவிர்த்திருக்க வேண்டும்''; அமைச்சர் நிர்மல்குமார்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு மக்களுக்கு சேவை செய்யும் தனது உறுதி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மெட்ரோ சேவை விரிவாக்கத்தால் சென்னையில் மாணவர், முதியோர் என அனைவரும் பயனடைந்து வருவதாக தெரிவித்ததோடு, தமிழ்நாட்டின் உற்பத்தி துறையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு உதவிகளை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, பிற முதல்வர்களுடன் பணியாற்றியது போன்று, முதலமைச்சர் விஜயுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் மேடையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முதலமைச்சர் விஜய், அமைச்சர் என். ஆனந்த் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நயினார் நாகேந்திரன் அரசு விழா மேடையில் அமரவைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் இது குறித்து  கூறியதாவது;

இன்றைய அரசு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பியாகவும் இல்லாத நயினார் நாகேந்திரனை அமரவைத்தது தவறான முன்னுதாரணம், அதனை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தவெக இடைத் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் மட்டும்தான் இருந்தனர். யாருடைய மாம்பிள்ளையோ அல்லது மகனின் நண்பர் ரத்தீஷோ இல்லை. எனவே முதலமைச்சரும், அமைச்சர்களும் வாழ்த்து கூறுவதும், புகைப்படம் எடுப்பதும் எந்தவிதத்திலும் தவறு இல்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல், இஸ்லாமியர்கள் தர்காவிலும், இந்துக்கள் கோயிலிலும் வழிபட்டு வந்தனர். ஆனால், பாஜக எப்போது உள்ளே வந்தது தலையிட்டதோ அன்றில் இருந்து அமைதி போய்விட்டது என்று குற்றம் சுமத்தியதோடு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வேல் பூஜை செய்தபோது, மேலே சமையல் செய்ய முடியவில்லை, வழிபாடு நடத்த முடியாமல் அவ்வளவு பிரச்சனை இருந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும், பாஜக தலையிட்ட பிறகுதான் அனைத்திற்கு நீதிமன்றம் செல்ல வேண்டியதாக இருக்கிறது. எனவே அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கோயில், வழிபாட்டுதலங்களில் தலையிட்டு அமைதியை கெடுத்துவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பியாகவும் இல்லாத நயினார் நாகேந்திரனை அமரவைத்தது தவறான முன்னுதாரணம், தவிர்க்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளில் இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபடக் கூடாது என்றும், அதனை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Nirmalkumar says that Nainar should have been excluded from the government stage


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->