குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000.. வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பால் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை காரைக்குடி பால் பண்ணையில் மூலம் குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தி இரண்டு மாவட்ட நுகர்வோர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நாசர், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது முதல்வரின் தேர்தல் அறிக்கை. 

இந்த அந்த வகையில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான நியமனங்கள் தொடர்பாகவும், பணி நியமனத்திற்காக 3 கோடி ரூபாய் வசூலித்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பால் உற்பத்தி 36 லட்சம் லிட்டராக இருந்தது, தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த ஆட்சியில் ஆவின் பால் விற்பனை 26 லட்சம் லிட்டராக இருந்தது, தற்போது 28 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்காக ஊழல் புகார் வந்த வண்ணம் உள்ளது. 

மேலும், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் செயல்படுத்துவார். பிற திட்டங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைபடுத்துவதை போல அதையும் முதலமைச்சர் செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister nasser press meet about family head rs 1000 per month


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->