மூக்குடைக்கப்பட்ட திமுக! உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன! அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது  டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 8ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில், சரியான வார்டு வரையறை செய்யவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என திமுக மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

திமுக தரப்பில் தொடரப்பட்ட மனுவில், ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிணை பின்பற்றி இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு தேர்தல் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது.  இதனையடுத்து தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளோம் என்பதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் அளித்தனர். இதனையடுத்து தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மேலும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையரை முடிக்க, நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்த நிலையில், அதனை மூன்று மாதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளனர். அதேபோல 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. 

இது குறித்து செய்தியாளர்கள் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தேர்தல் என்றாலே அஞ்சி நடுங்கும் நிலையில் திமுக இருக்கிறது. திமுக வரலாற்றிற்குஅதன் தலைவர் மு க ஸ்டாலின் அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார். உச்சநீதிமன்றம் திமுகவிற்கு சம்மட்டி அடி கொடுத்து உள்ளது. எதிர்க்கட்சிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளை வைக்கலாம் ஆனால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவேண்டும் அல்லவா? தமிழக அரசின் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister CV Shanmugam Press meet about supreme court verdict for local body polls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->