மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடிக்கு அழைப்பு.?! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


காவிரியின் குறுக்கே, கர்நாடக மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு, கர்நாடக மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று, தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கர்நாடக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை நிறைவேற்றினார். 

மேலும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நாளை நேரில் சந்தித்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை, திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கொடுக்க உள்ளனர்.

இதற்கிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, நேற்று பெங்களூருவில் மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், பிரதமர் மோடியை நாளை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியிடம் மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கி, அடிக்கல் நாட்ட வருமாறு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கோரிக்கை வைக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 
 

இதற்கிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, நேற்று பெங்களூருவில் மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், 'மேகதாது அணை விவகாரத்தில் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அனைத்துக் கட்சி குழு நாளை டெல்லி செல்கிறது.

பிரதமர் மோடியிடம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கொடுக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Megadathu Dam Issue some virul news


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->