திமுகக்கு எதிராக ‘மெகா கூட்டணி’: ஸ்கெட்ச் திமுகவுக்கு தான் போட்டாரு அமித்ஷா.. ஆனா, எடப்பாடிக்கு எதிரா திரும்பிருச்சே! குஷியில் ஓபிஎஸ் - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் கூட்டணி அரசியலில் பெரிய மாற்றங்கள் உருவாகும் சூழல் நிலவுகிறது. திமுகவுக்கு வலுவான மாற்றுக் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். அதிமுகவிற்கு மட்டுமல்லாது, பல சிறு மற்றும் நடுத்தர கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு “மேகா கூட்டணி” உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜக உயர்மட்டத்தில் நிலவி வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டாண்மை இல்லாததால், இரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை விடக் குறைவான வாக்குகளைப் பெற்ற திமுக 22 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வாக்குச் சிதறலைத் தடுக்க, “எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும்” என்பதே பாஜக தலைமை நோக்கமாகியுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைக் (ஓபிஎஸ்) அமித் ஷா தனிப்பட்ட முறையில் சந்தித்தது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரிதும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. ஓபிஎஸ் தனியா்ம சந்திப்பு பாஜக–அதிமுக உறவுகளில் விரிசல் ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்த நிலையை சமாளிக்க அமித் ஷா புதிய அரசியல் திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தொடங்கியுள்ள புதிய கட்சியையும், அதற்குள் இருக்கும் ஆதரவாளர்களையும் பாஜக கூட்டணியில் இணைக்க அமித் ஷா முடிவெடுத்ததாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் எடப்பாடி–ஓபிஎஸ் பிரிவினைக்கு ஒரு ‘இறுதி தீர்வு’ அமித் ஷா தலைமையில் உருவாகும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்து, தமிழகம் வர உள்ள அமித் ஷா, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். இவர்களை ஒன்றிணைத்து, திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒரே மேகா கூட்டணியாக மாற்ற வேண்டும் என்பதே பாஜக நோக்கம்.

தற்போது விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி, அதிமுகவில் தொடரும் பிரிவினை, காங்கிரஸ்–திமுக உறவுகளில் ஏற்பட்டுள்ள பதட்டம் போன்ற காரணங்களால், 2026 தேர்தல் அதிக போட்டியுடனும் கணிக்க முடியாத வடிவிலும் மாறியுள்ளது.

அமித் ஷா தமிழகம் வரும் நேரத்தில்,“திமுகக்கு எதிரான மிகப்பெரிய கூட்டணி”அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.இதனால், எதிர்வரும் வாரங்கள் தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mega alliance against DMK Amit Shah drew the sketch for DMK but he has turned against Edappadi OPS in Khushi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->