ம.தி.மு.க தீவிர ஆலோசனை! நவம்பர் 7-ம் தேதி நிர்வாகக்குழு கூட்டம்...!- வைகோ
MDMK intensive deliberations Executive committee meeting November 7th Vaiko
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) முக்கிய நிர்வாகக்குழு கூட்டம் நவம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டதாவது,"மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூன்ராஜ் தலைமையில் வரும் 07.11.2025 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, கட்சியின் தலைமைக் கழகமான தாயகம் வளாகத்தில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால அரசியல் திசை, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தயாரிப்புகள், மற்றும் அமைப்புக்குள் நடைபெறும் மாற்றங்கள் போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
MDMK intensive deliberations Executive committee meeting November 7th Vaiko