எனது குளியல் அறையில் கேமரா., வெளியே சொன்னால் நீங்கள் தலைகாட்ட முடியாது.! பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், தான் சிறையில் இருந்த போது, தன்னுடைய தனது சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என்று தெரிவித்துள்ளார். இது நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வரும் மரியம் நவாஸ், கடந்த 2008ம் ஆண்டு பணமோசடியில் ஈடுபட்ட வழக்கிற்காக 2019ஆண்டு கைது செய்யப்பட்டு மரியம் நவாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், தனது சிறை அனுபவம் குறித்து அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "தனது சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர். ஒரு பெண்ணாக சிறையில் நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது குறித்து பேசினால், அவர்கள் தங்களது முகங்களை வெளியே காட்ட முடியாது" என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maryam Nawaz press meet


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal