நாடக காதல் கும்பலுக்கு வசமாக ஆப்பு.! மத்திய அரசு கொண்டு வரப்போகும் சட்டத்திருத்தம்., பரபரப்பில் இந்திய தேசம்.! - Seithipunal
Seithipunal


உலக அளவில் இந்திய பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும்,  தாய்மையும் தான் காரணம் ஆகும். பெண்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும் பக்குவத்தை அடைய 21 வயது நிறைவடைய வேண்டியது அவசியமாகும்.

இவற்றைக்  கருத்தில் கொண்டு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். மேலும், கர்நாடக உயர்நீதிமன்றமும் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த பரிந்துரை அளித்திருந்தது.

இந்நிலையில், பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. மேலும், பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் போது குழந்தைகள் திருமண தடை சட்டமும் திருத்தப்படும் எண்டபத்து குறிப்பிடத்தக்கது. 

பள்ளி சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை காதல் என்ற போர்வையில் நாடகக் காதலால் சிக்கி, தங்களது வாழ்க்கையை இழந்து வரும் இந்த சூழ்நிலையில், பெண்களுக்கான திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்ற இருப்பது, பெண் பிள்ளையை பெற்றவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆம் 18 வயது நிரம்பிய ஒரு பெண்ணால் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை தற்போது வரை இருந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி படிக்கும்போதே சிறுமிகளை காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களை அந்த காதல் மாய வலையிலிருந்து வெளியேற விடாமல், பதின் பருவத்தின் முடிவில், பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கிவிட்டன.

இதில், நாடகக் காதல் செய்யும் கும்பலிடம் சிக்கும் பெண்களின் நிலை அதோகதிதான். அதிலும், திருமணம் நடைபெறாமல், திருமணம் நடைபெற்றதாக போலி சான்றிதழ் மூலம் அந்த குடும்பத்தை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க இந்த சட்டத்திருத்தம் பெரும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் பெண்களுக்கான திருமண வயது 18 லிருந்து 21 ஆக அதிகரிக்க இருப்பது, நாடக காதல் கும்பலுக்கு பெரும் அடியாக தான் இருக்கும். அதே சமயத்தில் இது பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு பாலை வார்க்கும் செய்தியாகும்.

இருபத்தி ஒரு வயது நிரம்பும் போது அந்த ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் புரிதல் ஓரளவுக்கு எட்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் தான் எடுக்கும் முடிவு சரிதானா என்பது குறித்த புரிதலும் அந்த பெண்ணுக்கு வந்திருக்கும். 

ஆகவே, அந்த பெண் ஒருவேளை தவறான நபரை காதலித்தால் கூட, தனது முடிவை மாற்றிக் கொள்ள ஒரு நல்வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இருபத்தி ஒரு வயது பெண்ணுக்கு நிரம்பினால் மட்டுமே அவர் செய்யும் திருமணம் சட்டப்படி செல்லும் என்பதால், இனி நாடக காதல் கும்பலால் சிறுமிகளை, கல்லூரி மாணவிகளை ஏமாற்றி, காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்யும் நிகழ்வுகள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. 

இருபத்தி ஒரு வயதிற்கு முன்னதாக திருமணம் செய்தால் நிச்சயம் சிறை தண்டனை என்ற அளவுக்கு தான் சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage age 21 central govt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->