நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், சில கட்சி நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். 

சமீபத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, ராஜீவ்காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில்  இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே திராவிடக் கட்சிகளை தமிழகத்திலிருந்து ஒழித்தாக வேண்டும் என கூறி வந்த சீமான் நேற்று சசிகலாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் மன்சூர் அலிகான், புதிய கட்சி தொடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட போவதாக மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இதனிடையே இன்று புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். சீமான் மீது அதிருப்தியில் இருந்த மன்சூர் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி 'தமிழ் தேசிய புலிகள்' என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mansoor ali khan started new party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal