மாணிக்கம் தாகூர் பொறுப்பை ராஜினாமா செய்தாரா இல்லையா..? வீடியோ வெளியிட்டு விளக்கம்..!
Manickam Tagore releases a video clarifying whether or not he resigned from his post
234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.மே மாதம் 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு ங்கிறே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 06ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை இன்னும் தமிழ்நாட்டிற்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வேட்பாளர் தேர்வு குறித்து தேசியத் தலைமையுடன் ஆலோசனையும் மேற்கொண்டிருந்தார்.
ஆனாலும், காங்கிரஸின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று இரவுக்குள் ராகுல் காந்தி வேட்பாளர்களை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். இருப்பினும் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் சூழலில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பினார்.
இது தொடர்பாக இன்று பிரபல செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறியதாவது;
நான் ராஜினாமா செய்தேன் என யார் சொன்னது?” என கேள்வி எழுப்பினார். இதனால், அவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறாரா இல்லையா எனும் குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று பிற்பகலில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது
''நேற்றில் இருந்து தேவையில்லாத குழப்பம் இருந்துவருகிறது. என்னை பொறுத்தவரை என்னால், காங்கிரஸுக்கு எந்தக் குழப்பமும் வரக்கூடாது என நினைப்பவன்.
தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக எனக்கு சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் தொடர விரும்பவில்லை என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு கடந்த 28ஆம் தேதியே தெரிவித்துவிட்டேன். எனவே அதுபற்றிய விவாதங்கள் தேவையற்றது. நான் எனது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல வேலை செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Manickam Tagore releases a video clarifying whether or not he resigned from his post