மகாராஷ்டிரா துணை முதல்வர் மகன் மீது ரூ.1804 கோடி நில மோசடி புகார் - முதலவர் போட்ட உத்தரவு!
maharashtra Deputy CM land scam
மகாராஷ்டிராவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நில மோசடி வழக்கில் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மகன் பார்த் பவார் தொடர்பு கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புனேவில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம், சுமார் ரூ.1804 கோடி மதிப்புள்ளதாகும். ஆனால் இந்த நிலம், பார்த் பவாருடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கே ரூ.300 கோடியில் மட்டும் பதிவு செய்யப்பட்டததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு நிலம் மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், ஆவணங்களை சரிபார்க்காமல் ஒப்புதல் வழங்கிய துணைப்பதிவாளர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். எந்த முறைகேடாக இருந்தாலும் அரசு அதை பொறுத்துக்கொள்ளாது; குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் அஜித் பவார், நில ஒப்பந்தத்துடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், உறவினர்களுக்காக எப்போதும் செல்வாக்கு பயன்படுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார். உண்மை வெளிக்குவர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அவரது கருத்தும் தற்போது பரபரப்பை அதிகரித்துள்ளது.
English Summary
maharashtra Deputy CM land scam