பேச்சுரிமை, கருத்துரிமையை தடுக்கக்கூடாது.. பாஜக தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. இதற்கு காவல்துறையின் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்ட நிலையில் உரிய விளக்கம் அளிக்காமல் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பாஜக பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. எதிர்கட்சியும், சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது இதே வேலையை தான் செய்கிறது.

கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது. மனுதாரரின் மனுவிற்கு உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC gives permission for Karur BJP meeting


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->