அரசியலுக்கு தயாரான விஜய்.. மதுரையில் மாநாடு.? பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவரது ரசிகர்களின் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் இயங்கி வருகிறது. இந்த விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அவரது பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகளை ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இது நடிகர் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான முதல் படி என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது மதுரையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 2024 பாராளுமன்றமே, 2026 தமிழக சட்டமன்றமே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் விரைவில் மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று இந்த போஸ்டர் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai vijay makkal iyakkam poster viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->