செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா? சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! - Seithipunal
Seithipunal


செந்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல!

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை துறை மற்ற இரு அமைச்சர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி இலக்கை இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அறிவித்தார். இதனை எதிர்த்து எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று அமைச்சரவை கூட்டங்களிலோ, தமிழக அரசு எடுக்கும் முடிவுகளிலோ கலந்து கொள்ள முடியாமல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார் என வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவரும் வழக்கத் தொடர்ந்தார்.

அதே போன்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனனும் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இலக்காயில்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும், எம்எல்ஏக்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்படுகிறதோ அந்த ஊதியம் தான் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது எனவும் வாதிக்கப்பட்டது.

அதேபோன்று இலாக்கா இல்லாத அமைச்சர்களாக இதற்கு முன் பதவியில் தொடர்ந்தவர்களின் விவரங்களும் அரசு தரப்பில் பட்டியலிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை ஒத்தி வைத்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பில் "ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் அமைச்சரவையில் தொடர்வது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல. எனவே செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர வேண்டுமா? என்பதன் மீது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதேபோன்று இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும்" எனக்கூறி அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வில்லை என்றாலும் அவர் அமைச்சரவையில் நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல என தனது அதிருப்தியை சென்னை உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. இதனை ஏற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவாரா? அல்லது ஆளுநர் விவகாரம் போன்று இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அனுமதிப்பாரா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC verdict that CM should decide Senthil Balaji continue as nontarget minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->