பாஜக வேட்பாளர் மீதான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வரம்புக்கு மீறி செலவு செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மக்களவை த் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 95 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் உச்சவரம்பை மீறி மத்திய சென்னை பாஜக வேட்பாளர் செலவு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தற்போது மனுதாரரின் மனு மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குப் பிறகு மனு மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சுயேட்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கில் முடித்து வைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc refused election case against BJP candidate VinojPSelvam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->