நீட் மரணங்களுக்கு நாங்கள் காரணம் இல்லை.! திமுக அமைச்சர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு க ஸ்டாலின், 'நீட் ரத்து முதல் கையெழுத்து',  'திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்', 'முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. மேலும், கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 3 பேர் நீட்தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் செங்கல்பட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் நீட் தேர்வால் உயிர் இறந்த போது அவரின் தந்தை, 'திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது போல் நீட் தேர்வை ரத்து செய்திருந்தால், எனது மகன் உயிரிழந்து இருக்க மாட்டான்' என்று பேட்டி அளித்து இருந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வால் பலியாகும் உயிர்களுக்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் என, திமுக அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பேட்டியில், 

"நீட் தேர்வால் இத்தனை உயிர்கள் போனதற்கு காரணம் யார்? தலைகீழாக நின்றாலும் நீட்தேர்வு விலக்கு அளிக்க மாட்டோம் என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பது யார்? என்று மக்களுக்கு தெரியும்.  என்று மா சுப்பிரமணியன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ma subramaniyan say neet exam dead issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->