வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! - Seithipunal
Seithipunal


ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் ஏதேனும் சில இயந்திரங்களில்  பதிவான  சீட்டுகள் மட்டும் எண்ணப்படுகிறது. அனைத்து ஒப்புக்கு சீட்டுகளையும் எண்ணி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடகோரி சுப்ரீம் கோர்ட்டில் 3 அமைப்புகள் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று, சஞ்சீவ் கன்னா,தி பங்கர் ரத்த ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அணைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

மேலும் இது குறித்து தீரிப்பில் கூறியிருப்பதாவது: 

வாக்குக்குள் செலுத்திய பின் சீல் வைக்கப்பட்ட இயந்திரங்களை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கான சின்னங்களுக்கு தனி  பார்கோடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். 

வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு  அறிவித்த ஏழு நாட்களுக்குள் இவிஎம்ல் உள்ள மைக்ரோ கண்ட்ரோலை சோதிக்க அனுமதி  கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், ஒப்புகைச் சீட்டுகளை இயந்திரம் மூலம் எண்ணுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசிஈலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

அதோடு ஒப்புகை சீட்டுகளை வாக்காளர்கள் கையில் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.  பரிசோதனை செய்யக்கோரும் பட்சத்தில் அதற்கான செலவுகளை கோரிக்கை வைக்கும் வேட்பாளர்களே ஏற்க வேண்டும்.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் செலவு தொகை திருப்பி தரப்படும். மேலும், கண்மூடித்தனமாக ஒரு நடைமுறையின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது தேவையற்ற சந்தேகங்களையே உருவாக்கும். இந்த தீர்ப்பானது நடைமுறையில் உள்ள  தொழில்நுட்பம் அடிப்படையில் விரிவாக விவாதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court refuse to allow manual voting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->