அதிமுகவில் இரண்டரை கோடி உறுப்பினர்கள்! உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி !! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், முடிவுகளை எதிர் நோக்கி திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. 

கடந்த சட்டமன்றத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அதிமுக,  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தயவின்றி தனித்தே களம் கண்டது. இதற்கு கட்சியினரிடையே வரவேற்பு கிடைத்தது.  இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகளை பெறுவதற்காக இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்ததாக கூறப்பட்டது. 

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி ஆயத்தமாகி வருகிறார். அதிமுகவில் புதிய உறுப்பினர்களை இணைத்து,  கட்சியில் உள்ள 2 1/2 கோடி தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்க  அதிமுக ஏற்பாடு செய்து வருகிறது. 

இந்த உறுப்பினர் அட்டையில் , உறுப்பினரின் புகைப்படம் , பெயர் மற்றும் கையெழுத்து ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த புதிய அட்டையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிச்சாமி  படமும் இடம்பெற்றுள்ளது  தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள்  கட்சியினரிடையே  விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது

புதிய உறுப்பினர் அட்டையை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட செயலாளர்கள் வழங்க உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi to give new member card to admk party caders


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->