கைநழுவிய தொழில் முதலீடுகள்...? 'சட்டமன்றத்தில் இருக்கு பதில் '...! - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாரான அமைச்சர் கீர்த்தனா... 'சட்டமன்றத்தில் இருக்கு பதில் '...! - Seithipunal
Seithipunal


தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வரவேண்டியிருந்த நிலையில் ஆந்திராவுக்கு மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான பதிலடி அளித்துள்ளார்.அவர் அங்கு குறிப்பிட்டதாவது,"தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கான தகுந்த பதிலை சரியான மேடையில் வழங்க வேண்டும்.சட்டசபையில் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை எழுப்புவார்கள் என நம்புகிறேன். அப்போது, எந்த காலகட்டத்தில் தொழில் முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறின, எதன் காரணமாக சென்றன என்பதனை ஆதாரங்களுடன் விளக்கமாக தெரிவிப்பேன்.

தவெக ஆட்சி அமைந்து இன்னும் ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. வெறும் 30 நாட்களில் பெரிய தொழில் முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிடும் என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.தொழில் முதலீட்டு நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முன்பிருந்த செயல்பாட்டு சிக்கல்களால்தான் சில முதலீடுகள் மாநிலத்தை விட்டு சென்றிருக்கலாம்.

அதற்கான அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளன.மேலும், டி.ஆர்.பி. ராஜா தற்போதைய அரசியல் மாற்றத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர் இன்னும் தொழில்துறை அமைச்சராகவே தன்னை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.மக்கள் யாரை தேர்வு செய்ய வேண்டும், யாரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டனர்.

அதனை ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தின் அடிப்படை மரியாதை.அதிகார மனப்பான்மையும், ஆணவ அணுகுமுறையும் இனி இடம் பெறாது. மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எங்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்பது மக்களுக்கே வழங்கப்படும் மரியாதையாகும்.

மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் போக்கை சிலர் இன்னும் தொடர்வது வருத்தமளிக்கிறது.நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேற்றும் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தெளிவான இலக்கை முன்வைத்துள்ளார்.

அந்த இலக்கை அடைவதற்கான தொலைநோக்கு செயல்திட்ட அறிக்கை தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. அதில் தமிழக வளர்ச்சிக்கான பல புதிய திட்டங்கள் இடம்பெறும். விரைவில் அதன் முழு விவரங்களும் மக்களுக்கு தெரியவரும்.”இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lost business investments answer lies legislature Minister Keertana who ready put end accusations opposition parties answer lies legislature


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->