தமிழக அரசு தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது.!! பகீர் கிளப்பும் எல்.முருகன்.!! - Seithipunal
Seithipunal


மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது திமுக அரசின் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஜவுளி தொழில் நலிவடையும் சூழ்நிலைக்கு காரணம் திமுக கொண்டு வந்த மின் கட்டணம் உயர்வு. வீடுகளுக்கும் 3 மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர் வேங்கை வயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நெல்லையில் வன்கொடுமை நடந்திருக்காது என கூறிய அவர், பொருளாதார குறைவாக உள்ளது என்ற ஒரே சமூகத்தை சார்ந்தவர்களை வெட்டிக் கொல்கிறார்கள். தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என விமர்சனம் செய்துள்ளார். 

கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை செய்கின்றன. ஆளுநர்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. அரசாங்க கோப்புகளை எல்லாம் கண்மூடி கையெழுத்து போடுவது ஆளுநர்கள் வேலை இல்லை. ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆளுநருக்கென சில அதிகாரங்கள் உள்ளது. அவற்றின் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lmurugan alleged TNgovt encourages terrorists


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->