புற்றுநோயை தடுப்போம்... ஆரோக்கியத்தை வளர்ப்போம்...! - ஸ்டாலின் அறிமுகம் செய்த புதிய மருத்துவ ஊர்திகள்!
Lets prevent cancer Lets promote health New ambulances introduced by Stalin
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெடுத்துள்ள புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக, அதிநவீன நடமாடும் மருத்துவ ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்,மகளிர் நலனை முன்னிலைப்படுத்தி, ரூ.40 கோடி மதிப்பில் 38 உயர் தொழில்நுட்ப மருத்துவ வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

இந்த மருத்துவ ஊர்திகள், கிராமப்புறங்களிலும் தொலைதூர பகுதிகளிலும் மருத்துவ சேவையை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி, செமி ஆட்டோ அனலைசர் போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, “மருத்துவம் மக்களிடம் – புற்றுநோயை தடுப்போம், ஆரோக்கியத்தை வளர்ப்போம்” என்ற நோக்கத்துடன் மாநில அரசின் மருத்துவப் பராமரிப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது.
English Summary
Lets prevent cancer Lets promote health New ambulances introduced by Stalin