பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குரும்பர்களை சேர்ப்பது குறித்து ஆய்வு - அன்புமணி இராமதாஸ் எம்.பி., வினாவுக்கு மத்திய அரசு பதில்.! - Seithipunal
Seithipunal


பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குரும்பர் ஆகிய சாதிகளை சேர்ப்பது குறித்த   தமிழக அரசின் பரிந்துரை இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில்  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குரும்பர்களை சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா? என்று  வினா எழுப்பியிருந்தார்.

அதற்கு  எழுத்து மூலம் விடையளித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் டூடு,’’ பழங்குடியினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது குறித்த பரிந்துரைகளுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகமும், தேசிய பழங்குடியினர் ஆணையமும் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அவை பட்டியலில் சேர்க்கப்படும்.

17.10.2016 ஆம் ஆண்டு தமிழக அரசு இது தொடர்பாக அளித்த பரிந்துரைகளில் இருந்து குருமன் சாதி மட்டும் தான் ஏற்கனவே பட்டியலில் 18-ஆவது இடத்தில் உள்ள குருமன்ஸ் சாதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

குருமன்களுடன் குரும்பா, குரும்பர்கள் ஆகிய சாதிகளையும் சேர்க்க வேண்டும் என்று 27.04.2020 அன்று தமிழக அரசு புதிய பரிந்துரை அளித்துள்ளது.  தமிழக அரசின் பரிந்துரை இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் டூடு தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kurumba and Kurumbas tribal list Anbumani Ramadoss MP Central Governments answer


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->