பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்.. நள்ளிரவில் வந்த உத்தரவு.. நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆளும் பாஜக அரசு படுதோல்வியை சந்தித்த நிலையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் எதிர்வரும் மக்களவைக் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் பாஜக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஆன கே.எஸ் ஈஸ்வரப்பாவை பாஜகவில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி வைப்பதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் லிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "பாஜகவின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஷிவமொக்கா நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் ஈஸ்வரப்பா சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயலாகும். எனவே அவர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும் அவர் ஆறு ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்" என அறிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் வாபஸ் பெறுவதற்கான காலப்பேடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஈஸ்வரப்பா தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வாபஸ் பெறாததால் நேற்று இரவு அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஈஸ்வர பாவுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஈஸ்வரப்பாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்றால் ஹாவேரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட தனது மகன் கே‌.இ காந்தேசுக்கு சீர் தருமாறு ஈஸ்வரப்பா கேட்டுள்ளார். ஈஸ்வரப்பா மகனுக்கு சீட்டு வழங்காத பாஜக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் இடையூறப்பாவின் மகனுக்கு சீட் வழங்கியதால் அவரை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ks eswarappa expelled from BJP contest against BJP candidate


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->