தேர்தல் கூத்து || சீட் பறிபோகும் பயம்.. அரக்க பறக்க வேட்புமனு தாக்கல் செய்த காங். வேட்பாளர்..!!
Krishnagiri Congress candidate gopinath submit nomination without leaders
திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செல்வகுமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலிலும் கிருஷ்ணகிரி தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அத்தகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கோபிநாத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செல்வகுமார் மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது
இதற்காக டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வரும் செல்வகுமார் எப்படியாவது மீண்டும் போட்டியிட சீட்டு வாங்கிவிட வேண்டும் என்ற பிடிப்புடன் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த தகவல் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபிநாத் காதுக்கு விழவே திமுக காங்கிரஸ் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தற்போது தனது குடும்பத்தினருடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோபிநாத் அரக்கப்பறக்க வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. காங்கிரஸ் வழங்கிய வாய்ப்பை இழந்து விடுவோமா என்ற பதற்றத்திலும் பயத்திலும் கோபிநாத் வேட்பமான தாக்கல் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Krishnagiri Congress candidate gopinath submit nomination without leaders